Sunday, August 4, 2013

இந்த வருடத்தின் வருமான வரி RETURN FILE செய்வதில் உள்ள பிரச்சினைகள்

இந்த வருடம் வருமான வரி RETURN செய்வதில் ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுந்து உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காண்போம்.

இந்த வருடத்தில் இருந்து ரூபாய் ஐந்து லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ஆன்லைனில் தான் வருமான வரி RETURN FILE செய்ய வேண்டும் என நமது நிதி அமைச்சர் சென்ற பட்ஜெட் உரையில் சொல்லி இருந்தார்.

இது மட்டும் அல்லாமல் நமது வருமான வரி துறை சென்ற வருடத்தில் ஐந்து லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர்கள் வருமான வரி நமுனா பதிவு செய்வதில் விலக்கு கொடுத்து இருந்தது . அந்த விலக்கை இந்த வருடம் வாபஸ் பெற்று கொண்டது. ஏன் இந்த விலக்கு வாபஸ் பெற வேண்டும் என்பதிற்கு காரணம் இது வரை மத்திய  அரசு தெரிவிக்கவில்லை.

இதன் விளைவாக எராளமான பேர் வருமான வரி நமனா ஜூலை மாத கடைசி தேதிக்குள்  பதிவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

அவ்வளவு பெரும் ஒரே சமயத்தில் வருமான வரி பதிவு செய்யும் WEBSITE க்கு சென்றதால், அந்த WEBSITE கடந்த பத்து நாட்களாக கிடைப்பது இல்லை.

ஒரு வருமான வரி  return பதிவு செய்ய ஒருவர் குறைத்த பட்சம் ஐந்து தடவை அவது அந்த வெப்சைட் க்கு செல்ல வேண்டும்.

முதலில் அவரது PAN நம்பர் வருமான வரி வெப்சைட் இல் பதிவு செய்ய வேண்டும்.

பிறகு அவரது TDS விபரத்தை பதிவு இறக்கி சரி பார்க்க வேண்டும்.
அதன் பிறகு அவரது வருமான வரி நமுனாவை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வளவும் செய்ய வேண்டும் என்றால் இந்த வருமான வரி இலாகாவின் வெப்சைட் சுலபமாக கிடைத்தால் மட்டுமே முடியும்.

ஆனால் கடந்த பத்து நாட்களாக வருமான வரி e FILING WEBSITE கிடைப்பதே இல்லை. காரணம்  என்ன?

தேவைக்கு ஏற்ப அந்த வெப்சைட் அதன் server   அதிக படுத்தபட வில்லை. அந்த வெப்சைட் இன் capaciy (Bandwith )  இல்லாததால் பல பேர் வருமான வரி returns  பதிவு செய்ய முடிய வில்லை.

என்னுடைய chartered accountant  நண்பர்கள் பலர் என்னிடம் தினசரி போன் செய்து அவர்களுடைய computax அல்லது winman  software இல் தவறா அல்லது bsnl அல்லது airtel இல் பிரச்சனையா என்று கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.

நான் அவர்களிடம் பிரச்சினை e filing website இல்தான் என்று விளக்கி சொன்னேன். நான் கடந்த சில நாட்கள தினமும் காலை ஐந்து மணிக்கு எழுந்து returns பதிவு செய்வதை ,சொல்லி அவர்களையும் அவ்வாறே செய்ய சொன்னேன்.

இவ்வளவு பேர் ஒரே சமயத்தில் நமனா பதிவு செய்ய காரணம் என்ன?

1. வருமான வரி return  FORMAT மற்றும் அதற்கான கம்ப்யூட்டர் SCHEMA  ஆகியவற்றை வருமான வரி துறை மிக தாமதமாக வெளிட்டது.

2. tds return பதிவு செய்து பிறகுதான் வருமான வரி return  பதிவு செய்ய முடியும்.

இப்போது வருமான வரி இலாகா வருமான வரி return  பதிவு செய்வதற்கு ஆகஸ்டு  ஐந்து தேதி  கடைசி நாளாக தெரிவித்து உள்ளது.

ஆனால் இன்னும் E  FILING வெப் சைட் சரி ஆக  வில்லை. ஆகவே  இந்த கடைசி நாளை  இந்த மாத  கடைசி  வரை அதிகம் செய்ய வேண்டும்.

இனிமேல் இந்த மாதிரியா பிரச்சனைகள் வராமல் இருக்க வருமான வரி துறை கிழ்க்கண்டவற்றை செய்ய வேண்டும்.

1. e filing வெப்சைட் இன் band width அதிக படுத்த வேண்டும். அதன் server  capacity யை அதிகம் செய்ய வேண்டும்.
2. வருட ஆரம்பித்திலேய அதாவது ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று  வருமான வரி return  போர்மட் மற்றும் schema வெளியிட வேண்டும்.



Monday, July 8, 2013

வருமான வரி return எப்படி scrutinyஇக்கு தேர்வு செய்ய படிக்கிறது.

வருமான வரி assessment ஆனது  பல விதமானது ஆகும். முக்கியானவை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

1. summary assessment
2. Scrutiny assessment.
3. Search assessment.
4. Reassessment.



இவற்றில் பலருக்கும் அவவப்போது வருவது scrutiny assessment ஆகும்.
scrutiny assessmen என்பதன் அர்த்தம் நன்றாக விசாரணை செய்து நமது வருமானத்தை வருமான வரி அதிகாரி கணக்கீடு செய்து வரி விதித்து வசூல் செய்வது என்று அர்த்தம் ஆகும்.

இவ்வாறு scrutiny assessmen செய்தால் வழக்கமாக எல்லோருக்கும் நாம் காண்பித்து கட்டிய வரியை விட அதிகம் கட்ட வேண்டி வரும். இது மட்டும் அல்லாமல் வாய்தா போடப்படும் போதும் பல தடவை,நாம் வருமான வரி அலுவலகத்துக்கு நமது கணக்கு புத்தகங்களை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். நாம் செய்த செலவுகள் எல்லாவற்றுக்கும் கொள்முதல் பில்கள், அல்லது voucher எடுத்து கொண்டு செல்ல வேண்டும். அதிகாரி கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதில் செல்ல வேண்டும்.

ஆகவே இந்த scrutiny assessment என்பது ஒவ்வொருக்கும்  மிகவும் கஷ்டமான காலம் என்பது உண்மை.

இன்றைய தலைப்பு இந்த scrutiny assessmentக்கு case எவ்வாறு வருமான வரி இலகாவினால்  தேர்த்து எடுக்கபடிகிறது என்பதை பார்போம்.

ஒரு வருமான வரி அதிகாரி வழக்கமாக வருடம் ஒன்றுக்கு சுமாராக 125  case
விசாரணை செய்து வரி விதிப்பார்.

இதில் அவர் 25 கேஸ் அவரே தேர்த்து எடுக்கும் உரிமை உள்ளது.  மீதியை வருமான வரி இலாகாவின் கம்ப்யூட்டர் சிஸ்டம் தேர்த்து எடுக்கிறது. இதை நாம் CASS முறை COMPUTER ASSISTTEDSCRUTINY SELECTION என்று கூறுகிறோம்.

வருமான வரி அதிகாரி தேர்த்து எடுக்கும்போது அவர்  அவரிடம் உள்ள நல்ல கேஸ் ஆகவும் , எதில் அதிகம் வரி ஏமாற்றம்  அதிகமாக அவருக்கு தோணுகிறதோ அதை தேர்த்து எடுத்து மேல் அதிகாரி (JOINT/ ADDITIONAL COMMISSIOER OF INCOMETAX) அவர்களிடம் முன் அனுமதி பெற்று நோட்டீஸ் அனுப்புவார். இதில் அவர் தேர்த்து எடுபதற்கு கிழ்க்கண்ட காரணங்கள் எதுவாக இருக்கலாம்.
1. அந்த வருடத்தில் பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்கலாம்.  அதற்கான செலவுகள் மிக குறைவாக கண்பிக்க பட்டு இருந்தால் அந்த கணக்கு நன்றாக விசாரிக்கப்பட்டு கட்டிடத்தின் உண்மையான செலவு CPWD முலமாக மதிப்பீடு செய்யப்பட்டு வித்தியாசத்துக்கு வரி விதிக்கப்படும்.

2. அந்த வருடத்தில் ரூபாய் பத்து லட்சத்து மேல் எதாவது தொழிலில் முதலீடு செய்து இருந்தால் அந்த கேஸ் scrutiny க்கு எடுத்து கொள்ளப்பட வாய்ப்பு உண்டு.

3. unsecured loans ரூபாய் 25 லட்சத்து மேல் வாங்கி இருந்தால் scrutiny வர வாய்ப்பு உண்டு. வங்கிகளிடம் வாங்கிய கடன்கள் எப்போதும் securedஆகவே இருக்கும். மற்ற உறவினர் வசம் வாங்கும் கடன்கள் தீவிரமாக விசாரிக்கப்படும். ஆகவேதான் இவ்வாறு பெரும் unsecured கடன் இருந்தால் scrutiny செய்து கடன் கொடுத்தவரை விசாரித்து பிறகு உத்திரவு போடுவார்கள். வெகு பேர் தங்களுடைய உறவினர் அல்லது நண்பர்களை உபயோகபடுத்தி அவர்களுடைய கருப்பு பணத்தை கணக்கில் வைக்க முயற்சிப்பதை இந்த SCRUTINY கண்டு பிடிக்கும்.

4. sundry creditors அதாவது பொருள் கொள்முதல் செய்து அதற்கு கொடுக்க வேண்டிய தொகையில் பாக்கி வைத்து இருப்பது ஆகும்.. இந்த வகையில் மொத்தமாக கொடுக்கப்பட வேண்டிய தொகை அந்த வருடத்தின் மொத்த விற்பனை தொகையில் 30% க்கு மேலாக இருந்தால் scrutiny வர கண்டிப்பாக வாய்ப்பு உண்டு.  உதாரணமாக ஒருவருடைய மொத்த விற்பனை ஒரு கோடி என்றால் அவருடைய வருட கடைசியில் கொடுபட பாக்கி(SUNDRY CREDITORS) ரூபாய் 30 லச்சம் மேல் போனால் SCRUTINY வர வாய்ப்பு உண்டு.

 நீங்கள் ஏன் இவ்வாறு scrutiny செய்ய வேண்டும் என்று நினைப்பது தெரிகிறது. காரணம் என்ன என்றால் சிலர் sundry creditorsகளுக்கு தங்களுடைய கருப்பு பணத்தை கொடுத்து விட்டு இங்கே கணக்கில் பணம் இருப்பு வைத்து இருப்பார்கள். அப்போது அவர்கள் கணக்கில் பணம் அதிகமாக இருப்பு இருக்கும். அந்த பணத்தை கணக்கில் சொத்து வாங்க உபயோக படுத்துவார்கள். இதை கண்டு பிடிக்கத்தான் இந்த மாதிரி sundry creditors மிக அதிகமாக இருந்தால் scrutinyக்கு எடுக்கிறார்கள்.

5. வழக்கமாக காண்பிக்கும் லாபத்தைவிட வெகுவாக குறைத்து வருமானம் காண்பித்தாலும் scrutiny வர வாய்ப்பு உண்டு.

6. முந்தின வருடம் scrutinyக்கு எடுக்கப்பட்டு ரூபாய் 10 லட்சத்து மேல் வருமானம் அதிகம் செய்து (addition) இருந்தாலும் இந்த கேஸ் scrutinyக்கு எடுக்கப்படும்.


இதுமட்டும் இல்லாமல் கிழ்க்கண்ட கேஸ்கள் , AIR information படி scrutinyக்கு எடுக்கபடுகிறது. AIR என்றால் என்ன ?

AIR என்றால் ANNUAL INFORMATION RETURN ஆகும். கிழ்க்கண்ட அதிகாரிகள் வருட வருடம் ஒரு return பதிவு செய்ய வேண்டும். அதை வைத்து வருமான வரி இலாகா scrutinyயை ஆரம்பிக்கும்.
அ. வங்கிகள்,
ஆ, CREDIT CARD ISSUING COMPANIES,
இ. ஷேர் வழங்கும் கம்பனிகள்.
ஈ, MUTUALFUNDS,
உ. சப் REGISTRAR,

1. வங்கியில் ஒரு வருட ஆரம்பத்திலிருந்து  இருந்து (01 ஏப்ரல் ) வருட கடைசி வரை (31st மார்ச் )   ரொக்கமாக கட்டிய தொகை ரூபாய் 10 லட்சத்துக்கு மேலே இருந்தால் அந்த தகவல் வங்கில் இருந்து மேல்படி AIR RETURN முலம் வருமானவரி இலாகாவுக்கு போகும். அதைவைத்து வருமான வரி இலக்கா உங்களை இந்த பணம் எப்படி வந்தது என்று கேட்பார்கள். இந்த பணம் வரி கட்டிய பணமாக இருந்தால் தப்பலாம். இல்லை என்றால் அதற்கு வரி, மற்றும் அபராதம் விதிக்க படும்.

2. CRDIT CARD வைத்து கொண்டு சிலர் இஷ்டத்துக்கு செலவு செய்வார்கள். இவ்வாறு செலவு செய்யும் தொகை ரூபாய் 2 லட்சத்து மிக இருந்தால் அந்த தகவல் வருமான வரி இலாகாவுக்கு போகும். இவ்வாறு செலவு செய்த தொகைக்கு சரியான வரி கட்டின வருமானம் இருந்தால் தப்பலாம். இல்லை எனில் மாட்டினார்கள்.

3.இதே மாதிரி ஒரு வருடத்தில் கம்பனியின் ஷேர் களில் நேரடியாக ஒரு லட்சத்துக்கு மேல கொள் முதல் செய்து இருந்தால் தகவல் வருமான வரி இலாகாவுக்கு போகும். ஆனால் SECONDARY மார்க்கெட்டில் கொள் முதல் செய்பவர் களுக்கு இது பொருந்தாது.

4.இதே மாதிரி MF ( MUTUAL FUND)இல் முதலீடு ரூபாய் இரண்டு லட்சம் மேல் ஒரு வருடத்தில் செய்து இருந்தால் scrutiny வரும்.

5.அதே மாதிரி யாராவது ரூபாய் முப்பது லட்சத்துக்கு  ( guidleline valueபடி ) மேல் அசையா சொத்து வாங்கி இருந்தாலோ அல்லது விற்பனை செய்து இருந்தாலோ அந்த விபரம் Registrarஇன் AIR முலம் வருமான வரி இலாகாவிற்கு போய் scrutiny வரும். இந்த விபரம் தெரியாமல் பலர் பத்திரம் எழுதுபவர் பேச்சை கேட்டு கொண்டு , பத்திரத்தில் தொகையை குறைத்து போட்டுகொண்டு பிறகு ஸ்டாம்ப் டுட்டி மட்டும் தனியாக கட்டி விடுவார்கள். ஆனால் உண்மையான விபரம் guideline படி கம்ப்யூட்டர் முலமாக வருமான வரி இலாகாவுக்கு தெரிந்து விடும்.

 ஆகவே நான் வேண்டி கேட்டுகொள்வது எல்லாம் எல்லோரும் கண்டிப்பாக guideline valueக்கு தான் கிரயம் செய்ய வேண்டும். அந்த தொகைதான் கண்டிப்பாக பத்திரத்தில் கிரயம் கொடுத்த தொகையாக எழுதி இருக்க வேண்டும். எல்லோரும் எந்த விதமான சொத்துக்கள் வாங்கும்போதும் விற்கும் போதும் கண்டிப்பாக பத்திர நகலை அவரவர் பட்டைய கணக்கர் (chartered accountant) வசம் கண்பித்து விட்டு அவரின் அறிவுரை பெற்று செய்ய வேண்டும்.

 இடம் வாங்கி கொடுக்கும் புரோக்கர் அல்லது பத்திரம் எழுதுபவர் சொல்லுவதை கேட்டு கொண்டு  guidelineக்கு குறைவாக பத்திரத்தில் எழுதி பிறகு ஸ்டாம்ப் டுட்டி கட்டினால் கஷ்டப்பட வேண்டி வரும்.

இது மட்டும் அல்லாமல் வேறு பல வழிகளில் வருமான வரி இலாகாவுக்கு தகவல்கள் வருகின்றன. பலவேறு பெட்டிசன்கள் மூலம் நிறைய தகவல்கள் கிடைகின்றன. இந்த இலாகாவில் CIB ( COLLECTION OF INFORMATION BRANCH) என்று பிரிவு உள்ளது. இந்த பிரிவு பல இடங்களில் இருந்து தகவல்கள் பெற்று அதை வருமானவரி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கிறது. புதிய விலை அதிகமான கார் வாங்கினால், மருத்துவ கல்லூரிக்கு பெரிய அளவுக்கு பணம் கட்டினால் , மிக அதிகமாக செலவு செய்து வெளிநாடு டூர் சென்று வந்தால் தகவல் நமது வருமான அதிகாரிக்கு கொடுப்பது இந்த பிரிவுதான்.


இதுவரை நான் எழுதி இருப்பது வருமான வரி இலக்கா எப்படி scrutinyக்கு
கேஸ்களை தேர்த்து எடுக்கிறது என்பதை பற்றி மட்டும் தான்.

இனி வரும் பதிவுகளில் scrutinyஇல் கணக்கு எப்படி பார்க்க படுகிறது என்பதை பற்றி விபரமாகாக  பல பதிவுகளில் பார்க்கலாம்.

இன்னொரு விஷயம் . நான் தமிழனாக பிறந்தாலும் வருமான வரி சம்பந்தமான சில technical termsக்கு சரியான தமிழாக்கம் தெரியாத காரணத்தாலும் நமது வாசகர்கள் சுலபமாக புரிந்து கொள்ளவேண்டும் என்ற தாக்கத்தாலும் , சில ஆங்கில வார்த்தைகள உபயோக படுத்தி இருப்பேன். மன்னிக்கவும்.








Friday, July 5, 2013

ரிசர்வ் வங்கியின் உத்திரவுகளை மதிக்காத வங்கிகள்


ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு  ஜூலை 2ம் தேதி அன்று வெளிட்ட மாஸ்டர் சர்குலர் படி அனைத்து வங்கிகளும் அவர்கள் வசூலிக்கும் பேங்க் கட்டணங்களை கண்டிப்பாக அவர்களுடைய வெப் சைட் இல் போட வேண்டும்.

ஆனால் இதை எந்த வங்கியும் முழுவதுமாக கடைபிடிப்பது இல்லை. உதாரணமாக கீழ்கண்ட கட்டனங்களைபற்றி எந்த வங்கியும் அவர்களுடைய வெப்சைட் இல் குறிப்பு இடவில்லை.
1. duplicate பாஸ் புக்.
2. அக்கௌன்ட் closure.
3. ECS RETURN
4. CHEQUE புக் REORDER.
5. annual fee for debit card.
6. DD Charges.
7. NEFT, SMS Alerts.

இப்போது ஒரு புதிய விஷயம் வந்து உள்ளது. அது என்னவென்றால் SMS அலெர்ட் க்கு கட்டினம்.

 கடந்த சில தினங்களாக பல வங்கிகள் திடீர் என SMS alertக்கு கட்டினம் போட்டு உள்ளார்கள்.


இவர்கள் நம்மை கேட்காமலே SMS alert free ஆக கொடுத்து நம்மை பழக்கி விட்டு நமது அனுமதி இல்லாமலே இப்போது  அதற்க்கு கட்டினம் போட்டு உள்ளார்கள்.


இதை விட வேடிக்கை என்னவெனில் AXIS வங்கி இந்த வசதி வேண்டாம் எனில் நாம் நினைத்தாள் , நாம் அவர்கள் வங்கிக்கு நேரில் சென்று இந்த வசதி வேண்டாம் என்று எழுதி கொடுக்க வேண்டும் என்று சொல்லி  உள்ளது. இந்த வசதியை online இல் withdraw செய்ய முடியாது. இது என்ன நியாயம்.



முதலில் இந்த வசதியை தானாகவே free ஆக கொடுத்துவிட்டு இப்போது நாம் இதற்க்கு பணம் கட்ட தயார் இல்லை என்றால் நேரில் வா என்றால் என்ன அர்த்தம்?


அர்த்தம் என்ன என்றால் வங்கிகளின் regulator ஆன RBI சரி இல்லை என்றுதான் அர்த்தம்.


நமது அரசும் RBIயும்  இருப்பதும் ஒன்று இல்லாமல் போவதும் ஒன்று என்று தோன்றுகிறது.


இந்த பொருளை பற்றி உங்கள் கருத்துக்களை தங்கள் comments பகுதியில் ஆங்கிலத்தில் அல்லது தமிழில் தெரிவிக்க வேண்டுகிறேன்.


RAJAMANICKKAM FCA ,ERODE

Thursday, July 4, 2013

கூட்டு நிறுவனங்களின் வருமான வரி நமனா பதிவு செய்யும் கடைசி நாள்.


இன்று என்னுடைய முதல் பதிவை கடவுளின் அருளுடன் ஆரம்பிக்கிறேன். உங்களுடைய வாழ்த்துக்களையும்  வேண்டுகிறேன்.

வருகிற ஜூலை மாதம் 31ம் தேதிக்குள்  தனிப்பட்ட நபர்கள், இந்து அவி பக்த  குடும்பங்கள் , மற்றும் ஒரு  கோடிக்கு குறைவுள்ள வியாபாரம் உள்ள  சிறு கூட்டு நிறுவனங்கள், தங்களுடைய வருமான வரி நமுனக்களை தாக்கல் செய்ய வேண்டும்.

அவர்கள் அவ்வாறு தாக்கல் செய்யாவிடில் அதற்காக பெனால்டி மற்றும் அபராத வட்டியும் கட்ட வேண்டி இருக்கும்.

வருமான வரி நமுனா தாக்கல் செய்யும் முன்னர் ஒவொருவரும் வருமானவரி இலாகாவின் TRACES என்ற WEBSITE சென்று அவர்கள் கணக்கில் வருமான வரி பிடித்தம் எவ்வளவு வைக்கப்பட்டு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு வரி பிடித்தம் செய்து யாராவது tds return பதிவு செய்யாமல் இருந்தாலோ அல்லது வரி பிடிக்கப்பட்டு அது தமது  கணக்கில் வராமல் இருந்தாலோ அதை சரி செய்து விட்டு அதற்கு பிறகுதான் வருமான வரி நமனா தாக்கல் செய்ய வேண்டும்.

ஆனால் கடந்த சில நாட்களாகவே வருமான வரி இலாகாவின் TRACES WEBSITE( TDS WEBSITE) சரியாக வேலை செய்வது இல்லை. இதற்க்கு முன் களத்தில் இந்த வேலையை NSDL என்ற மத்திய அரசு நிறுவனம் செய்து வந்தது.

சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு சொந்தமாகவே ஒரு website உருவாக்கி அதற்கு TRACES என்று பெயரிட்டு ஆரம்பித்தது.
 இதை தினசரி நடத்தும் வேலையை இன்போசிஸ் நிறுவனத்துக்கு கொடுத்தது.

ஆனால் இந்த வேலையை இன்போசிஸ் சரியாக செய்யாதகாரணத்தால் வருமான வரி நமனா தாக்கல் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது மட்டும் இல்லாமல் சிறு கூட்டு நிறுவனம்கள் தாக்கல் செய்ய வேண்டிய பாரம்  எண் V க்கு ஆன online filing இன்னும் ஆரம்பிக்கவில்லை.

இந்த மாதமே கடைசி ஆக இருக்கும்போது இதை இன்னும் ஆரம்பிக்காமல் இருப்பது சரி அல்ல.

கடைசி ஆக ஆக நமுனாக்கள் அவசரகதில் தயாரிக்கப்பட்டு தவறுகள் ஏற்பட வைப்புகள அதிகம் ஆகும்.

இந்த பிரச்சினைகளை வருமானவரி துறை நேர் கொண்டு விரைவில் தீர்க்க வேண்டும்.